CAPitalZ

உன் பெயர்

உன் பெயர்
எழுதினாலும் இன்பம்
எழுதிய பின்
உணர்கிறேன்

உன்னைப் பார்த்த பின்
காதல் உண்மையானது
காமம் அழகானது
பாடல் இனிமையானது
படங்கள் நிசமானது
தனிமை தவிப்பானது
துணை உறுதியானது
வாழ்க்கை சுவையானது
மகிழ்ச்சி நிலையானது
எதிர்பார்ப்பு எழிமையானது – நீ
எனக்குத் தேவையானது

2008/01/31

இன்னும் வருங்கால மனைவியை நேரில் பார்க்கவில்லை!

CAPitalZ

எது வேண்டும்?

கடவுள் வந்து என்னைக் கேட்டார்
கவிதையா? கை பிடித்தவளா?
கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன்
கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்

CAPitalZ

நிலைத்தது எது?

நான் காதலித்தேன்; கவிதை எழுத
எழுதியது நிலைத்தது.
கவிதை எழுதினேன் உனக்காக
நிலைத்தது அனைத்தும்.

2008/01/08

கூடாத சொல் கூட – நீ
கூறுகையில் இனிக்குத‌டி

2008/01/03

CAPitalZ

Loving You

I love you more than you’ll ever know – I know

You love me more than you’ll ever show

2008/01/01 

My fiancé wrote these lines.  I made the title.

CAPitalZ

கோபம்

உன் காதலில் தோற்றுப் போனது
பாவமாய் இருக்கிறது
கொஞ்சமாவது அனுமதியேன்

2007/12/28

CAPitalZ

பிள்ளை

நான் பாவம்
ஒரு இராட்சசியின் பிடியில் சிக்கித் தவித்தேன்
புதியதொரு குட்டிச் சாத்தானைக் கொண்டுவர

2007/12/27 

கெட்ட வார்த்தையில் திட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அன்போடு கூப்பிடுகிறேன்.

CAPitalZ

ஒரு கவிதை

உருவமில்லா கடவுளுக்கும்
நேர்மையில்லா காதலிக்கும்
அன்பில்லா காதலிக்கும்
ஏமாற்றுக் காதலிக்கும்
விருப்பமில்லா காதலிக்கும்
விளையாட்டுக் காதலிக்கும்
காதலிக்கும் தோழமைக்கும்
வாழ்க்கையின் வளிகாட்டிக்கும்
காமனவன் விளையாட்டுக்கும்
சோகத்தின் வெளிப்பாட்டுக்கும்
அழகின் வர்ணிப்புக்கும்
சிரிப்பின் சந்தோசத்துக்கும் – ஒரு கவிதை

ஆனால் உனக்கு மட்டும் ஒரு கவிதை,
முடியவில்லையே என் மனைவியே
நம் காதல்
உண்மையானதாலா

2007/12/10

எனது முதற் கவிதை; என் நிச்சயமான மனைவிக்கு. வேலையில் எழுதியது.

இறுதி வரியை “உன்னுள் நான் என்னுள் நீ என்பதாலா?” என்றும் முடித்திருக்கலாம்.

CAPitalZ

I am within You

I am the dark
Within night
You are the light
Within day
I am the breeze
Within wind
You are the rebel
Within me
I am the peace
Within you

« Newer Entries - Older Entries »


Video & Audio Comments are proudly powered by Riffly