குட்டி அம்மன் மூலம் contacts எடுத்து
மணமகள் தேவை என்னும் job posting பார்த்து
“அபிராமி” என்னும் resume பெயர் சொல்லி
அழகான முகம் interview காட்டி
சாதகங்களை reference விசாரித்து
ஜெயம் அண்ணாவிடம் security clearance பெற்று
நான் கொடுத்த job offer ஐ
நீ accept பண்ணி
2008ம் ஆண்டு நாம் தொடங்கிய project
1 1/2 வருடத்தில் bonus ஆக ஓவியாவை அளித்தது.
ஓவியா நம் மகள்
என் கண்கள் கமராவானால்
உன்னை, நித்தம் கண்ணடித்திருப்பேன்
கண்ணால் அடிபட்டு
வாயால் வாக்கு வாதப்பட்டு
கைகலப்பு ஏற்பட்டு
உன் தேகம் கைப்பற்றி
மனம் அதை மாற்றி
நெஞ்சத்தைக் கொள்ளையடித்து
கர்ப்பத்துள் குடியேற்றி
வாரிசை உருவாக்கி
ராச்சியத்தைக்…
கட்டி ஆளப் போறேனடி.
Fight
Talk
Peace
Ownership
Convert religion
Steal natural resources
Slavery/ Migration
Have children
Rule the empire
அபிராமி
உன்
பெயர் சிவனின் சக்தி
முகம் விஷ்ணுவின் லக்சுமி
குணம் ராமனின் சீதை
அழகு காமனின் ரதி
அறிவு பிரம்மனின் சரஸ்வதி
நீ
என் அபிராமி
January 12, 2008
உன் நித்திரையைக் களவெடுத்து – என்
கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன்
உன் இதயம் என்னிடத்தில்
நிம்மதியாக உறங்கட்டும் என்று.
கடலில் நதி
உடலில் உயிர்
நடையில் குணம்
தடையில் முயற்சி
விடையில் தெளிவு
படையில் வீரம்
உடையில் அழகு
கொடையில் மகிழ்ச்சி
மடலில் எழுத்துப் போல் – தமிழில்
நீ சங்கமம்!
“சங்கமம்” என்னும் இணையத் தளத்தின் உத்தியோகபூர்வ கவிதையாக எழுதியது (சிறு மாற்றத்துடன்).
அழகான பெண்ணைப் பார்த்ததும் – என் கண்
என்னையறியாமல் தவிக்கின்றதே.
கண்ணை ஏன் அடித்தீர்கள்?