Archive for the 'sooham' Category

CAPitalZ

New Girl

Since you said
We can never be together
I tried to search
A girl like you
I thought I found her
But just when I heard
That my heart doesn’t accept
Any newcomers…
I realized how much I love you

18/10/2003

உனது வார்த்தை ஒவ்வொன்றும்
என் இதயம் துளைக்கிறதே – ஏன்
நீ காதல் ஆயுதத்தால் சுட்டாயோ?

CAPitalZ

சுட்ட கவிதையா?

சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்

சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?

 

 

பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?

CAPitalZ

என்ன பாவம்

என்ன பாவம் செய்தனோ
உன்னை சந்திப்பதற்கு
சேரமுடியாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

தெரிந்திருந்தும்
தெரியாமல் கேட்கிறாயே
என்னைப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

பெண்ணில் பிடித்த எல்லாம்
உன்னில் இருக்க
உன்னை விட்டுப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

செய்த தானம்
போதாதென்பதால்
நம்மை வருத்திப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

எல்லாப் பாவமும்
கூட்டுச் சேர்ந்து நாம்
இணையாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

செவ்வாய் கெடுக்கிறான்
சாதகத்தில் வந்து
பொருந்தாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

சனியன் தண்டனை கொடுக்கிறான்
குடும்பத்தில் பிரச்சனை செய்து
பிடிக்காமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

11/09/2005

CAPitalZ

புதிய காதலி

புதிய காதலி

 

 

 

நான் எழுதிய அர்த்தம் வேறு. எனது நண்பன் கூறிய பதில் வேறு.

“ஆமாம்.
எனது புதிய காதலி தான்.
“நீ” ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய காதலி தான்!”

CAPitalZ

துணிவு

துணிவு

படத்தைப் பார்த்த பின் தான் கவிதை எழுதினேன்.

CAPitalZ

உனக்காக

உனக்காக

CAPitalZ

துக்கம்

‘துக்கம்’ என்னும் வார்த்தை – உன்னை
மீண்டும் கண்டபோது
ஞாபகம் வந்தது!

 

துக்கத்தில் எழுதவில்லை.

CAPitalZ

சுமை

சுமை

காதலுக்கு கண் இல்லை.

CAPitalZ

“மன்மதன்”

என்
முதற் காதலியே…
உன்
முதற் பழக்கத்திலேயே
என்னை
முழுமையாகக் கொள்ளையடித்தவளே.
உன்னைப்போல் – ஒவ்வொருத்தியும்
அப்படியே இருக்கமாட்டாளா என்று
முத்தமிட்டுப் பார்க்கின்றேன்!
முடியாமல் இருக்கிறதே
உன்னை
முழுமையாய் மறப்பதற்கு

எத்தனை பழிகள்
எத்தனை பாவங்கள்
சொல்லியும் திருந்தவில்லை
சொல்லாமலும் திருந்தவில்லை
வஞ்சித்தும் பார்த்தேன் – பல
பாவையர் உள்ளங்களை!
மிஞ்சியும்தான் பார்த்தேன் – மேல் நாட்டுப் பாணிகளை!
முடியாமல் இருக்கிறதே
உன்னை
முழுமையாய் மறப்பதற்கு

உன்னால்
எமாற்றம் எனக்கு – அன்று
என்னால்
ஏமாற்றம் பல பெண்களுக்கு – இன்று்று
அத்தனையும் செய்தேன் – உன்னை
மறக்கும் அவசரத்தில்
எல்லாம் உன்னால் தானேயடி
இருந்தும்
என்னை நானே நோவுகின்றேன்
எப்படியிருந்தாலும்
நான் செய்வதும் பாவம்தானே!

 

 

வஞ்சனைக் காரனின் மனசு பேசினால்.

Next »


Video & Audio Comments are proudly powered by Riffly