ஆண் பாதி பெண் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே ஆண் உள்ளே பெண்
விளங்க முடியாக் கவிதை நான்
ஆணை மாற்றி உணர்வை வென்று
பெண்ணைச் செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
பெண்ணை ஒடுக்கி மனதை மாற்றி
ஆண் மட்டும் வளர்கிறதே
============================
நீ பாதி நான் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே நான் உள்ளே நீ
விளங்க முடியாக் கவிதை நான்
என்னை வென்று உணர்வால் நின்று
உன்னை செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
உன்னைத் தள்ளி வெகுவாய் வென்று
நான் மட்டும் நிற்கின்றேன்
நான் காதலித்தேன்; கவிதை எழுத
எழுதியது நிலைத்தது.
கவிதை எழுதினேன் உனக்காக
நிலைத்தது அனைத்தும்.
2008/01/08
மனம்
என் மனம்
எனக்குச் சொன்னது
உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று
எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை
அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என்
காதல் கேள்வியை
ஆண், பெண்ணிடம் தன் காதலைத் தெரிவிக்கின்றான்
Oh babe…
I’ll write you an ocean of poems
With pearl lines
If you just say you can take me in
As everyday passes,
I lose myself
Onto yours. Why
I do not know.
Just I know one thing
Could not put myself
into a time, without
Thinking of you
26/10/2002
உன் அருகே நானிருந்து
தங்கக் கை பிடித்து
என் நெஞ்சில் உனைச் சாய்த்து
செவ் வானம் பார்த்தவாறு
ஒரு கணமேனும் – நான்
உறங்க வேண்டும்
இப் பிறவிப் பலனடைய
மணந்தால் நீ
இல்லையேல் மரணம் – என்று
கூறமாட்டேன் – அது
இயலாதவன் கூற்று
மணந்தால் நீ
இல்லையேல் மனதில் நீ – என்று
கூறமாட்டேன் – அது
நம்பிக்கை இல்லாதவன் கூற்று
மணந்தால் நீ
இல்லையேல் மற்றொருத்தி – என்று
கூறமாட்டேன் – அது
மோசடிக்காரன் கூற்று
இக் கவிதைக்கு முடிவை இன்னும் எழுதவில்லை. உங்களுக்கு சுவாரசியமான / திருப்புமுனையான / வித்தியாசமான முடிவு தோன்றினால், பின்னூட்டமாக இடவும்.
நீ
ஓடிப் போய் இருளில் ஒழிந்து கொண்டால்
நான்
காற்றைப்போல் பறந்து வந்து
மின்னலாய் உனைத் திருடி
புயலாய்ச் சென்றுவிடுவேன்