Archive for the 'nahaichchuvai' Category

CAPitalZ

வெங்காய‌ம்

நீ
வெங்காய‌ம்
வெட்டும் அழ‌கில்
நான்
க‌ண் க‌ல‌ங்குகிறேன்

I’m actually crying because of onion.

CAPitalZ

ஆளவந்தான்

ஆண் பாதி பெண் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே ஆண் உள்ளே பெண்
விளங்க முடியாக் கவிதை நான்
ஆணை மாற்றி உணர்வை வென்று
பெண்ணைச் செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
பெண்ணை ஒடுக்கி மனதை மாற்றி
ஆண் மட்டும் வளர்கிறதே

============================

நீ பாதி நான் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே நான் உள்ளே நீ
விளங்க முடியாக் கவிதை நான்
என்னை வென்று உணர்வால் நின்று
உன்னை செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
உன்னைத் தள்ளி வெகுவாய் வென்று
நான் மட்டும் நிற்கின்றேன்

CAPitalZ

சுட்ட கவிதையா?

சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்

சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?

 

 

பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?

CAPitalZ

வழிகாட்டி

கருங்கூந்தல் காட்டுக்குள்
காணாமல் போன எனக்கு
கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக்
கண்களைப் பின் தொடர்ந்தேன்

நெடுந்தூரப் பயணத்தில்
களைத்துப் போன என் ஏக்கத்திற்கு
நீ விட்ட மூச்சுக் காற்று
புத்துணர்ச்சியாய் இருந்தது

அலைமோதிக் கொண்டிருந்த இதயத்திற்கு
என் உயிர்க் கப்பலை கரை சேர்த்தது
நீ சிந்தாமல் சிந்திய
ஒரு சொட்டுப் புன்னகை

தவறிப் போன கால்களுக்கு
வழி காட்டிய வட்ட நிலாவோடு
கிட்டப் பேச ஆசைப்பட்டு
எட்டி நடந்த என் கால்களுக்கு
முற்றுப் புள்ளி வைத்துவிட்டானே – அவளின்
மொட்டை அண்ணன்

 

 

பெண்ணைப் பின் தொடரும் ஆண்.

CAPitalZ

மௌனம்

மௌனம்

மௌனம் மொழிகிறது.

CAPitalZ

கவிதைக் காதல்

கவிதையே…
உன் மேல் உள்ள காதலால்
நான் காதலிக்கின்றேன் – பெண்களை
அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக!

 

 

உன்னைக் காதலிக்கவா… நான் கவிதை எழுதுவதற்காக!

CAPitalZ

கண்ணாடி

கண்ணாடி

கண்ணாடி கதைத்தால்.
சற்று குறும்பாக எழுதவேண்டும் என்று நினைத்து எழுதிய கவிதை.

CAPitalZ

காதல் ஊடல்

காதல் ஊடல்

ஒரு MSN சம்பாசனை.

எங்கே என் பதில்
தேடித் தேடி அலைந்தேன்
அது உன்னிடத்தில் இல்லை என்று
அவளைப் பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன்!

CAPitalZ

அவளைத் தேடி

அவளைத் தேடி

காதலியைத் தேடி Toronto போகும் Ottawa காதலர்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம்.