நாத‌ன் Nathan

க‌விதை வ‌ருதில்லையே…

எதெதெற்கோ கவிதை எழுதினேன்
உனக்கு மட்டும் வருதில்லையே
என்னை ஏங்க வைக்காமல் இருந்ததற்கா?

நான் பார்க்காத அன்பு காட்டி
எனை ஏன் மறக்க வைத்தாய்?
நான் கேட்காத பாசம் தந்து
எனை ஏன் பிர‌காசிக்க‌ வைத்தாய்?
நான் நினைக்காத குடும்பம் காட்டி
எனை ஏன் இல‌யிக்க‌ வைத்தாய்?
நான் ஏங்காத காதல் செய்து
எனை ஏன் ஏங்காமல் வைத்தாய்?
பார் [world] கேட்டதெல்லாம்,
கேட்காமல் கிடைப்பதால்
உனக்காக கவிதை ஒன்றும் வருகுதில்லையே

நீயே தான் குற்றவாளி

நீதிபதியே,
என் இயலாமைக்கு
இவள் மேல் தான் குற்றம்.
கணவனின் தலையாய கடமையாக – நான்
குறைந்த பட்சம்
ஒரு கவிதையாவது எழுதிக் கொடுக்கவில்லை.

எனை ஏங்க வைக்காமல் கதலித்ததால்
அவள் என்னை விட அன்பு காட்டியதால்
அழகிய குடும்பம் ஒன்றை ஆசையாக கட்டியதால்

நான் கேட்டதெல்லாம்,
கேட்காமலே கிடைக்கச் செய்த‌தால்
எங்கு போவது – நான்
எங்கித் தவித்து
மனம் உருகி ஒரு காதல் கவிதை எழுத.

One Response to “க‌விதை வ‌ருதில்லையே…”

  1. நான் கேட்டதெல்லாம்,
    கேட்காமலே கிடைக்கச் செய்த‌தால் நன்றிகள் ‍‍‍‍‍‍,………………………………………………………..ம. த‌வ‌ம்

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்