CAPitalZ

ஆளவந்தான்

ஆண் பாதி பெண் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே ஆண் உள்ளே பெண்
விளங்க முடியாக் கவிதை நான்
ஆணை மாற்றி உணர்வை வென்று
பெண்ணைச் செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
பெண்ணை ஒடுக்கி மனதை மாற்றி
ஆண் மட்டும் வளர்கிறதே

============================

நீ பாதி நான் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே நான் உள்ளே நீ
விளங்க முடியாக் கவிதை நான்
என்னை வென்று உணர்வால் நின்று
உன்னை செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
உன்னைத் தள்ளி வெகுவாய் வென்று
நான் மட்டும் நிற்கின்றேன்

2 Responses to “ஆளவந்தான்”

  1. உங்க‌ள் க‌விதை சூப்ப‌ர். இது போல் இன்னும் நிறையா எழுதுங்க‌ள்.

  2. sivade says:

    இருப‌டைபு ஒண்றீனைந்து, இத‌யம் க‌ல‌ந்த‌பினே, த‌னியோர் க‌ல‌வையென‌த், த‌வழ்ந்துவ‌ந்த‌ பருவ‌மொண்றூ, த‌ணீயாத் துய‌ர்தூடைக்க‌, த‌ன்ன‌க‌த்தெ துன்ணதேடி, ப‌டிப்ப‌டியாஜ் செண்றத‌னால், ப‌ல‌கோடி ச‌ந்த‌தியாய், அண்றூதொட்டு இண்றூவரை, ஆண்டாண்டு ப‌ல்லாண்டு,அவ‌நிஜிலே தோட‌ட‌ர்ந்துவ‌ர‌, கொப்பாட்ட‌ன் முப்பாட்ட‌ன், இவ‌ர்க‌ள்தான் எமையாழ‌ப்பிறாந்த‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ளூக்கு ஈடாக‌, எவ‌ரும் இருந்த‌தில்லை, ஆத‌லினால் இவ‌ர்க‌ள்தான் ஆளவந்தோர், இவ‌ரைவிட‌ யாருமில்லை.”ஆளாவ‌ந்தோர்” ‍=கா.சிவா=(பிறாண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்